இதை செய்யும்போது, பிரபஞ்சம்  பதில் அளித்துதான் ஆக வேண்டும் – Law of Attraction in Tamil

இதை செய்யும்போது, பிரபஞ்சம் பதில் அளித்துதான் ஆக வேண்டும் – Law of Attraction in Tamil

Articles, Blog , , , , , , , , , , , , , , , , , , , , , , 26 Comments


நீங்கள் விரும்பியபடி எல்லாம் சரியாக நடந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை நீங்கள் பெற்றிருந்தால் உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான வலுவான உறுதியும் விருப்பமும் உத்வேகமும் உங்களுக்கு இருக்காது நமக்கு ஏற்படும் “எதிர்மறை” விஷயங்கள் தான் நம் வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரு பெரிய விருப்பத்தை தருகின்றன. உங்களுக்குள் எழும் அந்த மிகப்பெரிய ஆசை ஒரு காந்தம் போன்றது. ஒரு நெருப்பு போன்றது. அது மிகவும் சக்தி வாய்ந்தது. உங்களுக்குள் மிகப்பெரிய விருப்பத்தை உருவாக்கிய அந்த நெருப்பை தூண்டிவிட்ட அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள் ஏனெனில், உங்கள் விருப்பங்கள் என்னும் அந்த தீப்பிழம்பு தான் உங்களுக்கு பலத்தையும் உறுதியையும் தரும். உங்கள் வாழ்க்கையை மாற்றும். உங்கள் ஆழ்மன அதிர்வுகளில் “பணம் தேவை” என்ற உணர்வு இருந்தால் நீங்கள் பற்றாக்குறை உணர்வில் இருக்கிறீர்கள் ஆகவே, பணம் தேவை என்ற நிலையையே தொடர்ந்து ஈர்க்கிறீர்கள். படைக்கிறீர்கள். இப்போது,இந்த கணம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது, இந்த கணம் உங்களிடம் உள்ள பணத்துடன். ஏனென்றால், நாளை, நீங்கள் விரும்பும் பணம் உங்களிடம் பணம் இருக்கும்போது நீங்கள் எப்படி உணருவீர்கள் என்பதற்கு இந்த நிலையே, இன்றைய உங்கள் ஆழ்மன அதிர்வுகளே சாட்சி பணம் மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஆனால் மகிழ்ச்சி பணத்தை கொண்டு வரும். நீங்கள் விரும்புவது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது என்ற உணர்வுடன் உங்களை இணைந்திடுங்கள். இப்போது. இந்த கணமே அந்த உணர்வில் தொடர்ந்து நிலை கொள்ளுங்கள். இது தான் உலகின் மிக அற்புதமான உணர்வு. இந்த உணர்வை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கும்போது, அது வலுவடையும். தொடர்ந்து நீங்கள் இதைச் செய்யும்போது பிரபஞ்சம் உங்களுக்கு கட்டாயம் பதில் அளித்துதான் ஆக வேண்டும். ஈர்ப்பு விதி, தான் மேற்கொண்ட எந்த விஷயத்திலும் ஒருபோதும் தோல்வி அடைவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி என்றால், அது உங்கள் வாழ்க்கையிலும் தோல்வியடையாது இல்லையா?

26 thoughts on “இதை செய்யும்போது, பிரபஞ்சம் பதில் அளித்துதான் ஆக வேண்டும் – Law of Attraction in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *